சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான காணொசிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சுகாதாரக் கேடு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் காணொளி, நம் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் எவ்வாறு தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது என்ற பகீர் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வைரலாகும் அந்தக் காணொளியில், சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் நிரம்பிய ஒரு பெரிய சேமிப்புத் தொட்டிக்குள் இளைஞர் ஒருவர் குளிப்பது பதிவாகியுள்ளது. அந்தத் தொட்டியில் இறங்கி அவர் வெறும் குளியல் மட்டும் போடாமல், எண்ணெயில் முழுமையாக மூழ்கி எழுந்து, தனது தலைமுடியைக் கழுவி, உடல் முழுவதும் தடவிக்கொள்கிறார். பொதுமக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் அதே எண்ணெய்த் தொட்டியில் அவர் அநாகரீகமாகக் குளிக்கும் இந்தக் காட்சி இணையவாசிகளுக்குப் பெரும் அருவெர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை போன்று தோற்றமளிக்கும் அந்த இடத்தில், தரையில் எண்ணெய் சிதறிக்கிடப்பதும், அருகில் மற்றொருவர் நிற்பதும் காணப்படுகிறது. இத்தகைய கடுமையான சுகாதாரக் கேடுகளுடன் கூடிய முறையற்ற செயல்கள் எப்படி சகித்துக்கொள்ளப்படுகின்றன என்றும், நாம் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களின் தரம் எத்தகைய ஆபத்தான சூழலில் தயாரிக்கப்படுகிறது என்றும் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“>

 

@KUNDAN00PATEL என்ற பயனர் உள்ளிட்ட பலரும் இந்தக் காணொளியை இணையத்தில் பகிர்ந்து, சந்தையில் கடுகு எண்ணெய் வாங்குவதற்கு முன்பு அதன் தூய்மை மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் இதுபோன்ற பொறுப்பற்ற நபர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.