மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கியிருந்த மூடப்படாத ஆழமான குழியில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோஹம் லக்கான் கஸ்பே என்ற அந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மழைநீர் தடையின்றி செல்வதற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த சுமார் 3 அடி ஆழமுள்ள சாக்கடைக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்து மூழ்கியுள்ளான்.

நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடி அலைந்த நிலையில், குழிக்குள் குச்சியை விட்டுப் பார்த்தபோது குழந்தையின் உடல் மேலே மிதந்து வந்துள்ளது.

இந்த பயங்கர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் இன்றி அலட்சியமாக குழியைத் திறந்து வைத்த அடையாளம் தெரியாத ஒப்பந்ததாரர் மீது தீவிர விசாரணை நடந்து வருகிறது.