“அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புல இருந்து நான் மொத்தமா விலகுகிறேன்!” என்று கூடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் தனது அசல் ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் தற்பொழுது தமிழக அரசியலையே உலுக்கியெடுத்துள்ளது.

சமீபகாலமாக அதிமுகவிலிருந்து முக்கிய விஐபிக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக ஓட்டம் பிடித்து வரும் நிலையில், எடப்பாடியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலப் பகுதியில் இருந்து பொன் ஜெயசீலன் எடுத்த இந்த திடீர் முடிவு அதிமுக தலைமைக்கு மாபெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பொன் ஜெயசீலன் தனது ஆதரவாளர்களுடன் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் என்ற புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
