சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சம்பந்தப்பட்ட நபர் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகவும், இதனால் தான் மிகுந்த சங்கடத்திற்கும் பயத்திற்கும் உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அனுபவங்கள் அன்றாடப் பயணங்களில் பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் ஏற்படுவது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து அந்த நபர் வித்தியாசமான முகபாவனைகளுடன் முறைத்துப் பார்த்ததால், வேறு வழியின்றி அந்த இளைஞர் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து, “ஏன் என்னையே முறைத்துப் பார்க்கிறீர்கள்?” என்று அவர் சத்தமாகக் கேட்டவுடன், அந்த நபர் எந்தப் பதிலும் பேசாமல் இருக்கையை விட்டு எழுந்து மற்றொரு பெட்டிக்குச் சென்றுவிட்டார்.

“>

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரம் குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற அநாகரிகமான செயல்களைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக்கேட்ட அந்த இளைஞரின் துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.