தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.
இன்று (பிப். 17), காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. ரஞ்சித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அவருடன் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் எனப் பலரும் கூண்டோடு விலகியுள்ளனர். “தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் ஓபிஎஸ் தேவையற்ற தாமதம் காட்டி வருகிறார்; இதனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது” என்பதே இவர்களது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
விரைவில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆரம்பிக்கும் புதிய கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
