மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சனிக்கிழமை ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்யவிருக்கிறார். தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அவர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது.