உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பயனர்களுக்கு whatsapp மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது இனி குழு அழைப்பில் பங்கேற்ப அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 31 உறுப்பினர்கள் வாட்ஸ் அப் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளில் பங்கேற்கலாம். இதற்கு முன்னதாக 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த புதிய மேம்படுத்தப்பட்ட அம்சம் பயனர்களுக்கு சிறப்பு அழைப்புக்காக iOS 23.21.72  புதுப்பித்தலுடன் App store இல் கிடைக்கும். அதாவது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் எனவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.