தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும், நடிகை த்ரிஷாவையும் ஒப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் தற்போது காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது மேடையில் கண்ணியம் மீறி பேசிய நயினாரின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவே நேரடியாக களமிறங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி ஒரு அருவருத்தக்க கருத்தைத் தெரிவிக்கலாமா?” என மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

​மேலும் அந்த அறிக்கையில், தனக்கு எந்த ஒரு அரசியல் கோட்பாட்டுடனும் தொடர்பு இல்லை என்றும், எதிர்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணம் துளியும் இல்லை என்றும் த்ரிஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு இடையில் தேவையில்லாமல் தனது பெயரை இழுத்து அசிங்கப்படுத்துவதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். த்ரிஷாவின் இந்த ‘வெடி’ போன்ற அறிக்கை, நயினார் நாகேந்திரனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளதாக இணையதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.