கரூர் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு தமிழக அரசும் நடிகர் விஜய்யும் தான் காரணம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், விஜய்யின் மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் அசம்பாவிதங்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, “விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு ஒரு நல்ல சகுனம் தானே?” என்று அவர் நக்கல் தொனியில் பேசியது, தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.

​ஏற்கனவே நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி பலரும் அவரைச் சாடி வரும் நிலையில், இப்போது நேரடியாக விஜய்யின் அரசியல் நகர்வுகளையும், உயிரிழப்புகளையும் ஒப்பிட்டுப் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு துயரமான சம்பவத்தை ‘நல்ல சகுனம்’ என்று குறிப்பிட்டது மனிதாபிமானமற்ற செயல் என விஜய் ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நயினார் நாகேந்திரனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக மாறியுள்ளது.