திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

மேலும் திருமணமாகாத இவர் தனது தாய் சுப்புத்தாயுடன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்ராஜுக்கும், அவரது தாய்க்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ், தனது தாயை கீழே தள்ளிவிட்டு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் சுப்புத்தாய் அலறியதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சுப்புத்தாய் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தேவர்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.