கடலூர் மாவட்டத்தில் தையல் மிஷினுக்குள் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் பாம்புகள் குளிர்ச்சியை தேடி வீட்டுக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது மிகுந்த அவசியம்.
அதே நேரத்தில் பொந்துகள் மற்றும் ஷூக்கள் போன்றவைகளில் பாம்புகள் மறைந்து இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது சற்று வினோதமாக தையல் மிஷினுக்குள் ஒரு பாம்பு ஒன்று இருந்தது. அந்தப் பாம்பை எப்படியோ தையல் மிஷினுக்குள் இருந்து வெற்றிகரமாக பாதுகாப்பாக வெளியே எடுத்து விட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“சட்டை தைக்க வந்துருக்குமோ..?” தையல் இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்ட பாம்பு… #snake #cuddalore #viralvideo #thanthitv pic.twitter.com/olQJyT4a8h
— Thanthi TV (@ThanthiTV) April 15, 2026
