அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானியப் பிரதிநிதிகளுடன் எவ்வித மறைமுகத் தொடர்பும் இன்றி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
”பேச்சுவார்த்தையில் ஒரு நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த நிமிடம் போர் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது” என டிரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணுசக்தி கொள்கை மற்றும் ஹார்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு தொடர்பாக டிரம்ப் இந்த இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த ‘நேரடி பேச்சுவார்த்தை’ அழைப்பை ஈரான் ஏற்குமா அல்லது போர் மேகங்கள் மழையாகப் பொழியுமா என்பது அடுத்த சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
