இந்தியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த காபி என்ற பெண், இந்தியர்களின் மகிழ்ச்சியான கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பாவில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, இந்தியாவில் ஒரு புதிய செல்போன், ஸ்கூட்டி அல்லது கார் போன்ற சிறிய பொருட்களை வாங்கினாலும், மக்கள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவிப்பதையும், வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதையும் கண்டு தான் வியப்படைந்ததாக அவர் கூறியுள்ளார். இது மிகவும் நேர்மறையான மற்றும் அன்பான விஷயம் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காபியின் இந்த வீடியோவிற்குப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு புதிய பொருளை வாங்கினால் அதற்கு நண்பர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இருப்பதாகவும், அதேபோல் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாடுவதன் மூலம் மகிழ்ச்சியைப் பரப்பும் பண்பு இந்தியர்களிடம் இயல்பாகவே இருப்பதாகவும் பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gabi in India 🇮🇳 (@gabiinindia)

“>

சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் கண்டறியும் இந்தியர்களின் இத்தகைய பண்புதான் இந்த நாட்டை மிகவும் அழகாக மாற்றுகிறது என்று பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.