உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், குளிருக்காக காருக்குள் நிலக்கரி அடுப்பை பற்றவைத்து உறங்கிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மணிஷ் காந்தர் என்ற டாக்ஸி டிரைவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் குளிரைத் தாங்குவதற்காக காரின் ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டு, அடுப்பை எரியவிட்டபடி அவர் போர்வையைப் போர்த்தித் தூங்கியுள்ளார். அப்போது அடுப்பிலிருந்து வெளியேறிய நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு காருக்குள் பரவியதால், ஆக்சிஜன் கிடைக்காமல் அவர் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து அவரது உடலை மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

“>

 

மூடிய அறை அல்லது காருக்குள் இதுபோன்று நெருப்பு மூட்டுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ள போலீசார், இது குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.