பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை ஆப்கானிஸ்தான் துண்டிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி ஒருவர் கதறி அழும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் முழுவதும் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், வைரலாகி வரும் அந்த வீடியோவில், காய்கறி வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காலிபிளவர் மூட்டைகளின் மீது சாய்ந்து கொண்டு, ஒரு விவசாயி தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார்.
<a href=”http://

“>
விரக்தியின் விளிம்பிற்கே சென்ற அவர், ஒரு காலிபிளவரை எடுத்து அதன் விலையைக் கூறி தரையில் ஓங்கி அடிக்கும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதால் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதும், இதனால் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விவசாயிகளின் விளைபொருட்கள் தேக்கமடைந்துள்ளதே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரிகிறது.

அரசியல் முடிவுகளால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பாதிப்பில்லை என்றும், ஏழை விவசாயிகளே எப்போதும் அதன் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.