மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இந்த ஆபத்தான சம்பவத்தை உடனடியாக கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை பத்திரமாக காப்பாற்றினர். அவர்களின் விரைவான செயல்பாடு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பங்குரா ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதே நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சாமர்த்தியத்திற்கு பாராட்டையும் பெற்று வருகிறது. ரயிலில் ஏறும்போது பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.