உணவகத்தின் சமையலறையில், கொதிக்கும் பால் நிரம்பிய பெரிய பாத்திரத்தைக் கையாளும் போது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
சமையலறையில் பல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருக்க, இரண்டு பேர் இணைந்து அதிக அளவில் சூடான பால் நிரம்பிய பாத்திரத்தை மிகுந்த சிரமத்துடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
அனைத்தும் சரியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக, அவர்களில் ஒருவரின் கால் தரையில் வழுக்கி அவர் கீழே விழுந்துள்ளார். இதனால், பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் பால் முழுவதும் அவர் மீது கொட்டியதோடு, அதிலிருந்து தப்பிக்க முயன்ற மற்றொரு நபரும் வழுக்கி விழுந்து சூடான பாலின் பிடியில் சிக்கிக் கொண்டார்.
அதிக வெப்பத்துடன் ஆவி பறக்கும் அந்தப் பாலில் பட்டு, இருவரும் உடல் கருகி வலியால் அலறியபடி ஓடும் காட்சி, சமையலறையில் பாதுகாப்புடனும் கவனத்துடனும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
<a href=”http://
— unfortunately AWFUL (@eerie_awful) November 16, 2025
“>
இந்த விபத்து தொடர்பாகப் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நெட்டிசனன்கள், இந்தச் சம்பவத்தை மிகவும் பயங்கரமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
