தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் லிங்காலா கிராமம் அருகே உள்ள கிரீன்ஃபீல்டு தேசிய நெடுஞ்சாலையில், கட்டுக்கடங்காத வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்த கத்து ராம்பாபு மற்றும் கொம்மு சாய் ஆகிய இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Speed Thrills But Kills [#RoadSafety]
Two men Lost their Lives, after their #OverSpeeding Bike Crashed into railing on the Greenfield National Highway in #Kalluru mandal of #Khammam district, #Telangana, caught on #CCTV.
They are identified as Sai Mahesh (35) and Gattu Rambabu… pic.twitter.com/0WfTziM2UG
— Surya Reddy (@jsuryareddy) January 23, 2026
இதற்கிடையில், மகாராஷ்டிர மாநிலம் புனே லோனி கல்பூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதியதில் நிஷ்கர்ஷ் என்ற 7 வயது சிறுவன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கோர விபத்துக்கள் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
