சமூக வலைதளங்களில் தினந்தோறும் வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் @dost_vlogger என்ற பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தள்ளுவண்டியில் சாட் மற்றும் சப்பாத்தி விற்பனை செய்யும் ஒரு முதியவரிடம் செல்லும் இளைஞர், ஒரு பெட்டியைத் திறந்து அதிலிருந்த டார்ச் லைட், லென்ஸ் மற்றும் அளவிடும் டேப் (Inch Tape) ஆகியவற்றை எடுத்து திடீரென உணவின் தரத்தை ஆய்வு செய்வது போல நடிக்கிறார்.
View this post on Instagram
கையில் டார்ச் அடித்து உணவை உற்று நோக்குவதும், சப்பாத்தியின் அளவை டேப் கொண்டு அளந்து இது ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கிறது என்று கேள்வி எழுப்புவதும் என அந்த இளைஞர் செய்த லூட்டிகளால், உண்மையான உணவு பாதுகாப்பு அதிகாரி தான் வந்துவிட்டாரோ என நினைத்து அந்த கடைக்காரர் பயத்தில் உறைந்து போகிறார். சுமார் 4.6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர், “பாவம் அந்த முதியவரை இப்படி பயமுறுத்த வேண்டுமா?” என்றும், “உணவை வைத்து இப்படியெல்லாம் கேலி செய்யாதீர்கள்” என்றும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
