ஓசூர் அருகே ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் பயணியொருவர் தொங்கியபடி சென்ற திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஓசூரிலிருந்து பண்ணப்பள்ளி நோக்கிச் சென்ற TNSTC நகரப் பேருந்தில் பிக்கலூரைச் சேர்ந்த பயணி ஒருவர் ஏறி தும்மனப்பள்ளிக்குச் செல்ல முயன்றுள்ளார்.
பயணி தான் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பே தன்னை இறக்கிவிடுமாறு ஓட்டுநர் ரமேஷ் குமாரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஓட்டுநர் மறுக்கவே, அந்தப் பயணி தனது பேருந்து நிலையத்தில் சொல்லு மகா இறங்கியதும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை இயக்க முயன்றபோது அந்தப் பயணி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் திடீரெனப் பாய்ந்து தொற்றிக் கொண்டார்.
சுமார் 500 மீட்டர் தூரம் வரை பயணி ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் தொங்கியபடியே பயணம் செய்துள்ளார். இந்த மிரட்சியான சம்பவத்தை சக பயணி ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், அந்தக்காட்சிகள் இணையத்தில் காட்டுத் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
A Tamil Nadu State Transport Corporation (TNSTC) bus driver was suspended after a passenger allegedly clung to the front windshield of the moving bus for around 500 metres following an argument between the two at Hosur.
The incident occurred on Thursday when a TNSTC town bus… pic.twitter.com/QzKOmGRsW5
— Hate Detector 🔍 (@HateDetectors) August 10, 2026
“>
இந்த வைரல் வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட TNSTC பொது மேலாளர், பேருந்தை நிறுத்தாமல் ஆபத்தான முறையில் இயக்கிய ஓட்டுநர் ரமேஷ் குமாரை வெள்ளிக்கிழமையன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
