தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் (வேன்) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் ஒரு பயணி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 குழந்தைகள் உட்பட 12 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களின் இருமுடி பைகள் சிதறிக் கிடந்ததும், மருத்துவமனையில் காயமடைந்த குழந்தைகளைப் பார்த்து உறவினர்கள் கதறித் துடித்ததும் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
