Iphone 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால் ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஐபோன் 12, ஐபோன் 13 மினி, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஃபோன்களின் விற்பனையை நிறுத்தப் போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன்கள் ஸ்டாக் இருக்கும் வரை அமேசான் மற்றும் flipkart போன்ற தளங்களில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.