இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பண பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டன. யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை யாராவது உங்களுக்கு அனுப்பலாம் அப்படியான நிலையில் இந்த கோரிக்கையை நீங்கள் அங்கீகரிக்க கூடாது. யுபிஐ கட்டணத்திற்கு நீங்கள் அனுப்பும் பயனர் யார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தவறுதலாக கூட அனுமதி வழங்க வேண்டாம். இல்லையென்றால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.

அது மட்டுமல்லாமல் ஒரு நாளில் யு பி ஐ பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை செய்யலாம். யாருக்காவது பரிவர்த்தனை செய்வதற்கு முன்பு நீங்கள் அனுப்பும் யுபிஐ ஐடி சரிபார்க்கப்பட்ட பயனரால் இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். படம் அனுப்பும் நபர் மோசடி செய்பவராகவும் இருக்கும் என்பதால் எனவே பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்க வேண்டும். அதனைப் போலவே கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டு விடும். எனவே கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தும் போது முதலில் அதன் upi ஐடியை சரிபார்க்க வேண்டும். ஏதாவது தள்ளுபடி அல்லது பிற நன்மைகளுக்காக தெரியாத கியூ ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம். எனவே யு.பி.ஐ செயலியை பயன்படுத்தும் போது இது போன்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும்.