ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அணியில் சிஎஸ்கே வீரர்களான மிட்செல் சாண்ட்னர், ராசின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டிவோன் கான்வே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் டிம் சௌதி, இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர், ராசின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மாட் ஹென்ட்ரி, லாக்கி பெர்குஷன், டிவோன் கான்வே, மார்க் சாம்ப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரெண்ட் பிலெட் மற்றும் பின் ஆலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.