தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, இப்பணிகளைத் பொது தனியாரிடம் சேர்ந்து ஒப்படைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரியுள்ளது.
கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, ஆவடி, ஓசூர், தாம்பரம் மற்றும் வேலூர் ஆகிய 12 முக்கிய மாநகராட்சிகளில் இத்திட்டத்தை முதன்முறையாகச் செயல்படுத்துவது குறித்து இந்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
மாநகராட்சிகளின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக, அரசு தரப்பில் ரூ.4.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
