தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீடில்லாதவர்களுக்கான புதிய காப்பகத்தை திறந்து வைத்தார். இந்த காப்பகத்தில் உணவு, குடிநீர் வசதி மற்றும் அவர்களின் உடைமைகளை சேகரித்து வைப்பதற்கு அலமாரிகள் என அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டதோடு அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆதரவற்றவர்களின் காப்பகத்தில் தங்கி இருக்கும் ஒரு பெண் தற்போது இது குறித்து உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வெயில் மழையில் நாங்கள் வீடு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தோம். ஊசி பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில் எங்கள் சாப்பாட்டுக்கு கூட அந்த வருமானம் பத்தவில்லை. ஆனால் தற்போது தங்குவதற்கு வீடு கொடுத்து மூன்று நேரம் சாப்பாடு மற்றும் குடிநீர் போன்றவைகளும் கொடுக்கிறார்கள். நாங்கள் வேலைக்கு செல்லும்போது கூட இங்கிருந்து உணவை ஒரு டிபன் பாக்ஸில் எடுத்து செல்கிறோம். எங்களுடைய வீடு போன்று நாங்கள் சுத்தமாக பார்த்து கொள்ளும் நிலையில் குளிப்பதற்கு கூட சோப்பு ஷாம்பு போன்றவைகளும் கொடுப்பதாக அந்த பெண் கூறினார். மேலும் தங்களை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டதாக அந்த பெண் உருக்கமாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இதுதான் திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் பரவி வருகிறது.