தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அறிவித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து ஆலோனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது தனது ஆதரவை அவர் முறைப்படி உறுதிப்படுத்தினார்.
சந்தர்ப்பவாத கூட்டணி#TTVDhinakaran#EPS
pic.twitter.com/xeD0shhFdJ— Balaji (@_balajihere) January 21, 2026
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்தார். இதற்கு தினகரனும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு இரு துருவங்களாக இருந்த இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒருபுறம் வாழ்த்துகள் பரிமாறப்பட்டாலும், மறுபுறம் இணையதளங்களில் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முன்பு ஒருமுறை பாஜக கூட்டணியிலிருந்து அமமுக விலகி இருந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு பதில் தூக்கு மாட்டித் தொங்கிவிடலாம்” என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.
மேலும் தற்போது அதே எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததும், அதற்கு தினகரன் நன்றி சொன்னதும் முரண்பாடாக இருப்பதாகக் கூறி, அந்தப் பழைய வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
