தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி காலநாயக்கனூர் பகுதியில் அம்மாசி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான அம்மாசி குடும்ப பிரச்சனை காரணமாக பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அம்மாசி எட்டயாம்பட்டி ஏரி அருகே எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மாசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.