சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு ஸ்டைலெட்டோ சவாலை (Stiletto Challenge) முயற்சித்த ரஷ்ய செல்வாக்கு மிக்க பெண் ஒருவர் காயமடைந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

32 வயதான மரியன்னா பருட்கினா என்ற இளம்பெண், சமையலறை மேசையின் மேல் வைக்கப்பட்ட டப்பா மீது ஹை ஹீல்ஸ் காலணியுடன் ஏறி, கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து, பெரும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Мариана | материнства | живу жизнь (@mariana_vasiuc)

வீடியோவில், பருட்கினா ஒரு ஊட்டச்சத்து பெட்டியின் மேல் நிற்கும் முயற்சியில் சமநிலையை இழந்து நேராக தரையில் விழுவதைக் காணலாம். அவர் முதுகில் அடிபட்டதால், “கோம்பிரஷன் ஃப்ராக்சர்” எனப்படும் சுருக்க முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.

குறிப்பாக, இது அவர் ஒரு குழந்தை பெற்ற சில வாரங்களுக்குப் பிறகே நடந்த சம்பவமாகவும், குழந்தையின் பாதுகாப்பு குறித்து இணையவாசிகள் கவலை தெரிவிக்கத் தொடங்கிய நிலையில், பருட்கினா விளக்கம் அளித்து, “எனக்கு இரு ஆயாக்கள் இருக்கின்றனர்; என் குழந்தை நலமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.