நாடு முழுவதும் செயல்படும் CBSE (Central Board of Secondary Education) பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வை எழுத 75 சதவீதம் வருகைப் பதிவை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் என புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த புதிய வருகை விதி கல்வி அமைச்சகத்தினரால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது, தீவிர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக வருகை குறைவாக இருந்த மாணவர்கள், அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்தால், CBSE குழுவின் விசாரணைக்குப் பிறகு சிறப்பு அனுமதியுடன் தேர்வை எழுத அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின் படி, மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம் ஆகியோர் விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.