கரூர் மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய பலர் திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக விவசாய அணியின் மாவட்டச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட 50 பேர் நேற்று இரவு “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார நிகழ்ச்சியின் போது திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த நிகழ்வு, அமைச்சர் வெ.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் அதே மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்களை தங்களிடம் இணைத்து வருவதால், கரூர் மாவட்டத்தில் இரு தரப்பிலும் கட்சி சேர்க்கை நிகழ்வுகள் தேர்தல் பரப்புரையை மையமாக கொண்டு தீவிரமடைந்து வருகின்றன.

“>

 

இதனால், எதிர்வரும் தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அரசியல் சூடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.