இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆக.15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 16-ம் தேதி (சனிக்கிழமை), 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என்ற வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
இந்த நீண்ட விடுமுறை காலத்தை குடும்பத்துடன் செலவழிக்க மக்கள் திட்டமிட்டு வருவதுடன், சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில், பஸ் சேவைகளில் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, முக்கிய நகரங்களில் இருந்து வெளியே செல்லும் வழித்தடங்களில் டிக்கெட்டுகள் விரைவாக புக் செய்யப்படுவதால், பயணத்திட்டமுள்ளோர் உடனடியாக முன்பதிவு செய்து பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது.
