ஐபிஎல் 2026 சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா கடும் கோபத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

நாளை நடக்கும் முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்காக ரோகித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, ரோகித் சர்மா தனது 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் இருந்து இறங்கியபோது, காரின் பின்புற கதவை (Trunk) திறக்க முயன்றுள்ளார்.

ஆனால் அது சரியாக திறக்காததால் ஆத்திரமடைந்த ரோகித், காரின் கண்ணாடியிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டார். அதோடு நில்லாமல், காரை சரியாக கவனிக்காத டிரைவரை பார்த்தும் “என்ன பண்றீங்க.. திறக்க மாட்டேங்குது பாருங்க” என ஆவேசமாக கத்தியுள்ளார்.

களத்தில் எப்போதும் நிதானமாக காணப்படும் ‘ஹிட்மேன்’ இப்படி டென்ஷனாகி காரையே குத்திய வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.