கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள ‘P1 ஸ்டாண்ட்’ பகுதியில் 11 இருக்கைகள் இனி எப்போதும் காலியாகவே விடப்படும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அந்த 11 ரசிகர்களின் நினைவாகவும், அவர்கள் அணியின் மீது வைத்திருந்த மாறாத பற்றைப் போற்றும் விதமாகவும் இந்த அமைதியான அஞ்சலி செலுத்தப்படுகிறது.

“ஒரு முறை ஆர்சிபி ரசிகர் என்றால், எப்போதும் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவரே” என்ற வாசகத்துடன் அந்த இருக்கைகள் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.