இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், எப்போதும் எம்.எஸ். தோனியை விமர்சித்தே பேசி வந்த நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஓய்வு குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசி வரும் நிலையில், “தோனியை ஓய்வு பெறச் சொல்ல மற்றவர்கள் யார்? அவர் எப்போது விலக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்” என்று யோகராஜ் சிங் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தோனி ஒரு மிகச்சிறந்த வீரர் என்றும், இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப்பெரியது என்றும் புகழ்ந்து தள்ளியுள்ள அவர், மற்றவர்கள் தோனியின் தனிப்பட்ட முடிவில் தலையிடக் கூடாது என்றும் காட்டமாகப் பேசியுள்ளார்.
எப்போதும் தோனி மீது கடும் விமர்சனங்களை வீசி வந்த யோகராஜ் சிங்கின் இந்தத் திடீர் மனமாற்றம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
