நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி அவர்களது வங்கியில் கார் லோன் வாங்குவதற்கு செயலாக கட்டணத்தை மொத்தமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதனைப் போலவே டிசம்பர் மாதம் வரை வீட்டு கடன்கள் மீதான வட்டியில் ஆபர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் லோன் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றிற்கு நீங்கள் YONO அப்ளிகேஷன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.