குஜராத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெடோலி நகரில் 50 ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்பொழுது பேசிய அவர், நாடு முழுவதும் சுமார் 4000 கோடி வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்திருப்பதால் நான் மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.

ஏழை எளிய மக்கள் வீடுகள் என்பது வெறும் எண்கள் அல்ல. எங்களுக்கு ஏழை மக்கள் அவர்களுக்காக வீட்டை மரியாதையோடு கட்டிக் கொள்ள உதவி செய்வதுதான் மத்திய அரசின் கடமை. என்னுடைய பெயரில் வீடு இல்லை. எனினும் என்னுடைய அரசு நாட்டின் லட்சோப லட்ச மக்களின் பெயர்களில் சொந்தமாக வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.