இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழ் பெற்ற எம்எஸ் சுவாமிநாதன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பசி இல்லாத இந்தியாவை உருவாக்கும் வேட்கையில் தனது விடா முயற்சியால் வேளாண் விஞ்ஞானி ஆனார். உணவு உற்பத்தியை பெருக்க புதிய ரக நெல் வகைகளை அறிமுகப்படுத்திய அவரின் பணியை போற்றும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 98 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.