இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் 2016 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென்று 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.