நாட்டின் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி உடல் அதற்கான கால அவகாசம் நிறைவடைவதால் அதற்கு பின் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது. இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் இன்னும் இரண்டு வேலை நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே உங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் அரசு பேருந்துகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
