உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், புதுமணத் தம்பதியினரிடையே ஏற்பட்ட விசித்திரமான தகராறு காரணமாக விவாகரத்து கோரும் நிலை உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன்  செல்லும்போது, கணவர் தனது மனைவிக்குத் தெரியாமல் பெற்றோர், தங்கை மற்றும் தம்பி என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றதுதான் இந்தத் தகராறுக்கு முக்கியக் காரணமாகும்.

தம்பதியினருக்கு இடையேயான அந்தத் தனிப்பட்ட நேரத்தில் குடும்பத்தினர் தலையிட்டதால் கடும் அதிருப்தியடைந்த மணமகள், தனது கணவருடன் வாழ மறுத்து விவாகரத்து கேட்டு குடும்ப ஆலோசனை மையத்தை நாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குடும்ப ஆலோசனை மையத்தில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. தனது குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே அவர்களை அழைத்துச் சென்றதாகக் கணவர் தரப்பில் நியாயப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், மணமகள் தனது முடிவில் உறுதியாக இருப்பதால், இன்னும் சில காலம் அவகாசம் கொடுத்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரில் உயர்கல்வி பயின்ற மணமகன் மற்றும் பட்டதாரி மணமகள் ஆகிய இருவருக்கும் இடையே, திருமண இணையதளம் வழியாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.