ஹரித்வாரின் சராய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 குட்டிப் பாம்புகள் இருப்பதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர், தாலிப் மற்றும் போலா ஆகியோரின் உதவியுடன் அந்தப் பாம்புகளைப் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்டவை அனைத்தும் ‘செக்கர்டு கீல்பேக்’ எனப்படும் நஞ்சற்ற நீர் பாம்புகள் என அடையாளம் காணப்பட்டன. இவை எப்படி தண்ணீர் தொட்டிக்குள் வந்தன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

ஆசிய நீர் பாம்புகள் என்று அழைக்கப்படும் இந்த ‘செக்கர்டு கீல்பேக்’ பாம்புகள், பொதுவாக குளங்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழக்கூடியவை. இவை மீன்கள் மற்றும் தவளைகளை உணவாகக் கொண்டு, நீர்நிலைகளின் சூழலியல் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

“>

 

இவை மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாதவை என்றாலும், திடீரென வீட்டிற்குள் இவ்வளவு பாம்புகள் கண்டறியப்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.