சூரத்தில் உள்ள சர்தானா நேச்சர் பார்க் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலி மீது பார்வையாளர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூண்டுக்குள் அமைதியாகப் படுத்திருந்த புலியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் கற்களை வீசியது கண்டனத்திற்குரிய செயலாக மாறியுள்ளது.
விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடத்திலேயே அவற்றுக்கு இத்தகைய இன்னல்கள் நடப்பது விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளைத் துன்புறுத்துவோருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், விலங்குகளிடம் கண்ணியமாக நடப்பது குறித்த விழிப்புணர்வை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
விலங்குகளின் சுதந்திரத்தையும், அவற்றின் அமைதியையும் மதிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
