உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், அரசு ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நோயாளிக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் கிடைக்காமல் போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தும், அதன் பூட்டைத் திறக்க முடியாமல் ஊழியர்கள் சுத்தியலால் அடித்துத் திறக்க முயலும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவசர சிகிச்சை வாகனத்தில் உயிர்காக்கும் உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம், அரசு மருத்துவ அவசர சேவை கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நோயாளிக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு என்றும், ஆம்புலன்ஸில் உள்ள கருவிகள் முறையாகச் சோதிக்கப்படுகின்றனவா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“>

 

இது போன்ற அவசரக்கால மருத்துவ வாகனங்களில் உயிர்காக்கும் உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.