கோடைக் காலத்தில் தாகத்தைத் தணிக்கப் பலர் விரும்பி அருந்தும் மங்கோ டிரின்க்ஸ் போன்ற பாக்கெட்டுகளில், தரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்கோ டிரின்க் பாக்கெட்டை வெட்டும்போது, அதன் உள்ளே கறுப்பு நிறத்திலான ஒரு விசித்திரமான பொருள் இருப்பதைக் காட்டும் இந்த வீடியோ, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், அந்த வீடியோவில் உள்ள தகவல் உண்மையா அல்லது அது அந்தப் பாக்கெட்டில் இருந்ததா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
आपके घर के बच्चे भी अगर ये पीते है तो सावधान हो जाए 😱
ये फ्रूटी को काटा और इसके अंदर कुछ ऐसा निकला जिसे देख कर आप हैरान हो जाएंगे pic.twitter.com/WCRi1lplPh
— Zeeshan waris (@Zeeshan75460423) June 7, 2026
“>
எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன்பாக அதன் காலாவதி தேதி, பேக்கேஜிங் நிலை மற்றும் தரம் ஆகியவற்றைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம். ஒருவேளை பாக்கெட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதைப் பயன்படுத்தாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிப்பதே சரியான அணுகுமுறையாகும்.
