சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில் 10:30 மணி அளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.