தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்களும் அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற பட்ஜெட்டில் இடம் பெறும் என அறிவித்தார். இந்நிலையில் இது தேர்தல் விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி பேசுவது தேர்தல் விதி மீறலில் வராது என்று அவர் கூறியுள்ளார்