மணிரத்னம் டைரக்டில் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் அடிக்கடி காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில் சோபிதா நான் அழகாக இல்லையென சிலர் விமர்சனம் செய்ததாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்திருக்கும் பேட்டியில், “படங்களில் நடிப்பதற்கு முன் நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அந்த சமயத்தில் நான் வெள்ளையாக இல்லை, அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள். எனினும் அதற்காக நான் சோர்வடையவில்லை. தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்களிலும் என் முழு திறமையையும் காண்பித்தேன். அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக்கொடுத்தது” என அவர் கூறினார்.