தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் வருடம் வெளியான தர்மத்தின் தலைவன் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் குஷ்பு. இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ஹிட் ஆனார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

பாஜக நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டு உள்ளார். இதற்கு முன்னதாக அவர் அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.