தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக வலம் வருகிறார் சினேகன். சென்ற 2000-ம் வருடம் திரைப்படங்களுக்கு பாடல் எழுத துவங்கிய இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு வரிகள் எழுதி உள்ளார். இவர் பாடலாசிரியராக மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இதையடுத்து சினேகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார் சினேகன்.

இதனிடையே சினேகன் நடிகை கன்னிகாவை கடந்த 2021ம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சினேகன் நேற்று முன்தினம் தன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள சினேகன், “தனது அன்பான வாழ்த்துக்களால் எனது பிறந்தநாளை மிக சிறந்த நாளாக மாற்றி அமைத்த என் தலைவருக்கு கோடானக் கோடி நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.